Sunday, December 23, 2007

எளிதாக பல புகைப்படங்களை எடிட் செய்வது எப்படி?( Action பயன்)

ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒரே மாதிரி எடிட் செய்யவேண்டும் என்றால் திரும்ப திரும்ப ஒன்று ஒன்றாக செய்யாமல் ஒரு முறை செய்ததையே மற்ற படங்களுக்கும் தானாக செய்வது போல் போட்டோ ஷாப்பில் நாம் செய்ய முடியும்.

இதில் எந்தமாதிரி எடிட்டிங் வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணத்துக்கு போன பதிவில் நாம் பார்த்த இமேஜ் சைஸ் குறைப்பதையே இங்கு எப்படி பலபடங்களுக்கு தானாக செய்யவைப்பது என்று பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கு எடிட் செய்யவேண்டிய புகைப்பட தொகுப்பு இருக்கும் இடத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை ஓப்பன் செய்தபின் மேலே மெனுவில் இருக்கும் window வில் Action என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்யவேண்டும் அல்லது Alt+f9( function key) கிளிக் செய்தால் படத்தில் இருப்பது போல்

புது விண்டோ என்று இருக்கும் அதன் மேல் மூலையில் இருக்கும் சிறு அம்புகுறி (படத்தில் சிகப்புகலர் கட்டம்கட்டி இருப்பது) அதை கிளிக் செய்தால் மற்றொரு window ஓப்பன் ஆகும் அதில் New Action என்று இருப்பதை கிளிக் செய்தால் ஒரு பாப் அப் விண்டோவில் Action Name என்று இருக்கும் அதில் Resize என்று நான் கொடுத்து இருக்கிறேன் நீங்கள் உங்கள் வசதிக்கு ஒரு பெயர் கொடுத்து Record யை கிளிக் செய்தால் இனி நீங்கள் செய்யபோகும் அனைத்தும் அந்த Actionல் Record ஆகும்.

நீங்கள் என்ன என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை எல்லாம் செய்துவிட்டு (image->imagesize-> 25%) வேறு ஒரு புதிய Folderl அதே பெயரில் jpg ஆக Save செய்துவிட்டு. மறக்காமல் அந்த படத்தை close செய்துவிடுங்கள். பின் அந்த Action window வில் இருக்கும் கீழே இருக்கும் சதுர வடிவ Stop ஐகானை கிளிக் செய்து நிறுத்திவிடுங்கள்.

பின் மெனுவில் file-> Automate->Batch யை கிளிக் செய்தால் ஓப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு எடிட் செய்யவேண்டிய புகைபடங்கள் இருக்கும் folder யை தேர்வு செய்து பின் Action என்று இருக்கும் இடத்தில் நீங்கள் Actionக்கு கொடுத்த பெயரை தேர்வு செய்து ஓக்கே கொடுத்துவிட்டுபோய் வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்த்துவிட்டு வாங்க. அனைத்து படங்களும் அளவு குறைந்து நீங்கள் Save செய்த புது folderல் இருக்கும்.

குறிப்பு:
1) படத்தை ஓப்பன் செய்தபிறகே new Action கொடுக்கவேண்டும்.

2) save செய்யும் பொழுது பெயர் மாற்றம் செய்ய கூடாது, new folderல் தான் சேமிக்கவேண்டும்.

3) மறக்காமல் படத்தை close செய்துவிடவேண்டும் (இல்லை என்றால் அத்தனை புகைப்படங்களும் போட்டோஷாப் உள் ஓப்பன் ஆகியிருக்கும்.

4) புதிதாக Action பெயர் கொடுக்கும்பொழுது என்ன செய்யபோகிறீகளோ அதுக்கு தகுந்த பெயர் கொடுப்பது நலம், பல மாதங்களுக்கு பிறகு இதே வேலையை திரும்ப செய்யவேண்டும் என்றால் அப்பொழுது பல Action நீங்கள் உருவாக்கி வைத்து இருந்தால் எந்த Action யை தேர்வு செய்வது என்று குழப்பம் வரும். கலர் சேஞ்சுக்கு Action என்றால் colorchange என்று கொடுங்கள் இதை பல மாதத்துக்கு பிறகும் உபயோகப்படுத்தலாம்!!

இதில் சில சமயம் இதுபோல் செய்யும் பொழுது ஒரு தவறுவரும் அதை நீங்கள் செய்து பார்த்துவிட்டு என்ன தவறு வருகிறது என்று சொல்லுங்கள் அதை எப்படி சரி செய்யனும் என்று சொல்கிறேன்.

(நான் சொல்வது புதியவர்களுக்கு புரிகிறதா என்று சொல்லுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் படமாக தரமுயற்ச்சி செய்கிறேன்.)

16 comments:

said...

pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustratr, page maker, flash எல்லாம் சொல்லி தர மாட்டீங்களா? :O

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustratr, page maker, flash எல்லாம் சொல்லி தர மாட்டீங்களா? :O///


முதலில் இது பின் எல்லாம்:)))

said...

கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ஒவ்வொரு புகைப்படமாக திறந்து சிறிதாக்குவேன்.

இனிமே அப்படி கஷ்டப் பட தேவையில்லை. உபயோகமான தகவலுக்கு நன்றி.

said...

உண்மையில் பலருக்கு உபயோகமான தகவல்கள்..;))

வாழ்த்துக்கள் அண்ணே ;)

said...

குசும்பன் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
pthotoshop மட்டும்தான் சொல்லித்தருவீங்களா? illustratr, page maker, flash எல்லாம் சொல்லி தர மாட்டீங்களா? :O///


முதலில் இது பின் எல்லாம்:)))
///



கலாய்த்தலுமா...:)

said...

மிக நன்றாக நடக்கிறது போலயே க்ளாஸ்.. வர்ரேன் படிக்க..

said...

//நான் சொல்வது புதியவர்களுக்கு புரிகிறதா என்று சொல்லுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் படமாக தரமுயற்ச்சி செய்கிறேன்.)//

கொஞ்சம் படம்,கொஞ்சம் விளக்கம் புரிகிற மாதிரியே இருக்கிறது.செய்முறையும் பரிட்சிக்கும் போது இதுவே போதும் என்றுதான் தோன்றுகிறது.வேகம் மட்டும் நேற்று இன்று போல் தொடர்ந்தால் போதும்.நன்றி.வாழ்க!வளர்க உங்கள் பதிவுகள்.

said...

பயனுள்ள விபரங்கள் மாம்ஸ்.. நன்றிகள் தொடர்க..

said...

வெங்கட்ராமன் said...
கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ஒவ்வொரு புகைப்படமாக திறந்து சிறிதாக்குவேன்.

இனிமே அப்படி கஷ்டப் பட தேவையில்லை. உபயோகமான தகவலுக்கு நன்றி.///

ஆம் வெங்கட் போட்டோசாப் உபயோக்கிக்கும் பலரும் இதை செய்யமாட்டார்கள் ஒன்று ஒன்றாகதான் எடிட் செய்வார்கள், பலருக்கு இதுபோல் ஒரு வசதி இருப்பது தெரியாது.

***************************
கோபிநாத் said...
உண்மையில் பலருக்கு உபயோகமான தகவல்கள்..;))

வாழ்த்துக்கள் அண்ணே ;)///

நன்றி தம்பி

*****************************
மின்னல் கலாய்த்தல் இங்க கிடையாது:)

*******************************
முத்துலெட்சுமி said...
மிக நன்றாக நடக்கிறது போலயே க்ளாஸ்.. வர்ரேன் படிக்க..///

நன்றாக இருக்கான்னு நீங்கதான் சொல்லனும் போட்டோஷாப் CD கிடைத்ததா?

*****************************
நட்டு said...
///கொஞ்சம் படம்,கொஞ்சம் விளக்கம் புரிகிற மாதிரியே இருக்கிறது.செய்முறையும் பரிட்சிக்கும் போது இதுவே போதும் என்றுதான் தோன்றுகிறது.வேகம் மட்டும் நேற்று இன்று போல் தொடர்ந்தால் போதும்.நன்றி.வாழ்க!வளர்க உங்கள் பதிவுகள்.///

செய்முறையின் போது சில சந்தேகம் வரும் தயங்காமல் கேளுங்கள் அல்லது தனியாக மெயில் அனுப்புங்கள்.
தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன். தங்கள் தொடர்வருகையும் ஊக்கமும் எழுதவைக்கும்:))

**************************
ரசிகன் said...
பயனுள்ள விபரங்கள் மாம்ஸ்.. நன்றிகள் தொடர்க..///

ரசிகன் உங்களுக்கும் நான் மாம்ஸா? அவ்வ்வ்வ் அடேய் குட்டி பிசாசுங்களா இருங்க உங்களை கவனிச்சுக்கிறேன்.

************************

said...

நல்ல தகவல் மாமா.. நான் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அடயாள அட்டை தயாரித்துக் கொடுத்த போது படங்களை க்ராப் செய்து, அதை சரியான இடத்தில் பொறுத்தி பின்னர் அதை JPG படமாக மாற்றுவதற்கு இதை பயன்படுத்தி இருக்கீறேன்.. ஆனால் இதை படங்களை அழகுபடுத்த பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. கலர் கரெக்ஷன், வெளிச்சம் போன்றவை எல்லா படங்களுக்கும் ஒரே அளவில் செய்யப் படுவதில்லயெ. படத்திற்கு படம் மாறுபடும். அல்லது இதற்கும் ஏதேனும் வழி இருக்கா?

said...

//ரசிகன் உங்களுக்கும் நான் மாம்ஸா? அவ்வ்வ்வ் அடேய் குட்டி பிசாசுங்களா இருங்க உங்களை கவனிச்சுக்கிறேன்//

ஏதோ.. எங்களால முடிஞ்சது.. :))

(இங்கே கும்மி வேண்டாம் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கே மாம்ஸ்..)

said...

//வெங்கட்ராமன் said...

கேமராவில் எடுத்த புகைப் படங்களை இ-மெயிலில் அனுப்ப ஒவ்வொரு புகைப்படமாக திறந்து சிறிதாக்குவேன்//

இதற்கு பிக்காசாவிலும் தீர்வு இருக்கு.. உங்கள் படங்கள் இருக்கும் ஃபோல்டரை import செய்து அதை Export செய்யும் போது படத்தின் அளவை நமக்கு தேவையான அளவு கொடுத்து மொத்த படங்களையும் எளிதாக சிறிய படங்களாக மாற்றலாம். என் படப் பொட்டியில் நான் எடுக்கும் 10MP படங்களை இப்படி தான் சில KB களில் அடக்கி வைக்கிறேன். :)

said...

//படங்களை அழகுபடுத்த பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. கலர் கரெக்ஷன், வெளிச்சம் போன்றவை எல்லா படங்களுக்கும் ஒரே அளவில் செய்யப் படுவதில்லயெ. படத்திற்கு படம் மாறுபடும். அல்லது இதற்கும் ஏதேனும் வழி இருக்கா?///

இல்லை பொடியன் இதுபோன்ற விசயங்களுக்கு இதை பயன் படுத்த முடியாது, கலர் கரெக்ஷன் நாம் தனிதனியாக செய்தால் தான் சரி வரும்! வேறு வழி இல்லை:(

said...

சரவண வேல் - உபயோகமான பதிவு - நன்றி - பழக வேண்டும் - பழகுகிறேன்

Anonymous said...

Well said.

said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்