Sunday, September 23, 2007

போட்டோஷாப் பகுதி1- ஆரம்பம்

போட்டோஷாப்பை ஓப்பன் செய்து file---> New கொடுத்தால் . இமேஜ்1 ல் இருப்பது போல் ஓப்பன் ஆகி இருக்கும்.
இமேஜ்1(பெரிதாக்க அதன் மேல் கிளிக் செய்யவும்)

முதலில் இருப்பது Name: Untitled-1 (என்று இருக்கும், நீங்கள் அதில் என்ன பெயர் வேண்டும் என்றாலும் கொடுத்துக்கலாம்)


அடுத்து இருப்பது preset சைஸ் (இது முன்பே அவர்கள் உருவாக்கி வைத்து இருக்கும் டெம்ளேட் சைஸ்) உதாரணத்துக்கு நீங்கள்A4 அளவு லெட்டர் பேட் டிசைன் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அதன் அளவு தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லைநீங்கள் அங்கு இருக்கும் டிராப் டவுன் பட்டனை அழுத்தினால் அதில் நிறைய மாறுப்பட்ட அளவுகள் கொடுக்க பட்டு இருக்கும்.


அதில் நீங்க விரும்பிய தேவைபடும் அளவை தேர்ந்து எடுத்துக்கலாம். எதுக்கு இந்த அளவுகள் என்றால் நான் வீடு கட்ட பிளான் போடுவது போல்இத்தனை அடி நீளம் இத்தனை அடி அகலம் என்று முன்பே முடிவு செய்து ஆரம்பிப்பது போல் இங்கேயே அளவுகள் கொடுக்கவேண்டும்.

இல்லை என்றால் நீங்களாக உயரம், அகலம் அளவுகளை கொடுக்கவேண்டும்.
அளவுகள்: 1) Pixels
2)Inches
3)cm
4)mm
5)Points
என்று பல அளவுகள் இருக்கின்றன, எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளவும்.
அடுத்து Color Mode : RGB (பொதுவாக பிரிண்டிங் அல்லாத மற்ற உபயோகத்துக்கு)
CMYK (பிரிண்டிங் மட்டும்)
Gray Scale (கருப்பு வெள்ளை மட்டும்)
இப்படி உபயோகத்துக்கு தகுந்தபடி நாம் தேர்வு செய்யவேண்டும், நாம் இங்கு RGB கலரை எடுத்துக்கலாம்.
Background Contents: white யை தேர்ந்து எடுத்துக்கலாம்.
பின் ஓக்கே பட்டனை கிளிக் செய்யவும்.

ஏன் போட்டோஷாப் ?

முதலில் போட்டோஷாப் என்பது போட்டோக்களை எடிட் செய்ய பயன்படும் ஒரு சாப்ட்வேர், இதன் மூலமாக கருப்பு வெள்ளை படத்தை கலராக மாற்றுவது, பழை கிழிந்த படங்களை புதிதாக்குவது கூட்டத்தில் இருக்கும் ஒருவரை மட்டும் தனியாக காட்டுவது, அல்லது தனியாக இருப்பவரை கூட்டத்தோடு நிற்க்க வைப்பது. முகத்தை மட்டும் மாற்றுவது (மார்பிங்) இப்படி பல பயன்கள் இருக்கின்றன.இது வரை போட்டோஷாப்பில் அடுத்த அடுத்த மாற்றங்கள் (வெர்ஷன்கள்) வந்து இருக்கின்றன இப்பொழுது கடைசியாக போட்டோஷாப் 9, அதற்க்கு முன்பு போட்டோ ஷாப் CS2 (கிரியேட்டிவ் ஷூட்) போட்டோ ஷாப் CS போட்டோ ஷாப் 7 போட்டோ ஷாப் 6 என்று நிறைய இருக்கிறது இதில் ஒவ்வொன்றுக்கும் இடையே சின்ன சின்ன கூடுதல் வசதிகள் இருக்கும். உங்களுக்கு லேட்டஸ்ட் ஷாப்ட்வேர் கிடைக்க வில்லை என்றாலும்குறைந்த பட்சம் போட்டோஷாப் 7 வது அவசியம்.

நான் உபயோகப்படுத்துவது போட்டோ ஷாப் cs2 .(ஏதும் சொல்லி கொடுப்பதில் வித்தியாசம் இருந்தால் கேளுங்கள்) பார்த்துவிட்டு சொல்கிறேன்

அறிமுகம்

வணக்கம் அனைவருக்கும் நான் இங்கு ஒரு சிறிய வெப்சைட் எப்படி செய்வது என்பதை சொல்லி கொடுக்கலாம் என்று இருக்கிறேன். ஏதோ இது ஒன்னை வச்சுக்கிட்டுதான் நானும் நான்கு வருடமாக வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன், இது வரை ஒரு 50க்கும்மேல் வெப்சைட் டிசைனிங் செய்து இருக்கிறேன், http://www.geocities.com/sarveltnj/ இங்கு நீங்கள் இங்கு என்னுடைய அனைத்துவெப்சைட்யையும் பார்க்கலாம். எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துக்கிறேன் நீங்கள் ஏதும் தவறோ, அல்லது ஆலோசனையோஇருந்தால் சொல்லுங்கள்.

ஒரு வெப்சைட் செய்ய கற்றுக்கொள்ள வேண்டியவை என்று பார்த்தால்
1) போட்டோ ஷாப் (Photo Shop)
2) பிளாஷ் (Flash)
3) HTML
இவை மூன்றும் தெரிந்து இருக்கவேண்டும். இதில் முதலில் நேரடியாக வெப்டிசைனிங் செய்ய இறங்காமல் முதலில்,போட்டோஷாப்பில்சின்ன சின்ன எடிட்டிங், கட்டிங் எல்லாம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பிறகு ஒரு மாடல் வெப்சைட்டை எடுத்துக்கொண்டுஅதை எப்படி வெப்சைட்டாக மாற்றுவது என்பதை நாம் பிறகு பார்க்கலாம்.