Sunday, September 23, 2007

போட்டோஷாப் பகுதி1- ஆரம்பம்

போட்டோஷாப்பை ஓப்பன் செய்து file---> New கொடுத்தால் . இமேஜ்1 ல் இருப்பது போல் ஓப்பன் ஆகி இருக்கும்.
இமேஜ்1(பெரிதாக்க அதன் மேல் கிளிக் செய்யவும்)

முதலில் இருப்பது Name: Untitled-1 (என்று இருக்கும், நீங்கள் அதில் என்ன பெயர் வேண்டும் என்றாலும் கொடுத்துக்கலாம்)


அடுத்து இருப்பது preset சைஸ் (இது முன்பே அவர்கள் உருவாக்கி வைத்து இருக்கும் டெம்ளேட் சைஸ்) உதாரணத்துக்கு நீங்கள்A4 அளவு லெட்டர் பேட் டிசைன் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அதன் அளவு தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லைநீங்கள் அங்கு இருக்கும் டிராப் டவுன் பட்டனை அழுத்தினால் அதில் நிறைய மாறுப்பட்ட அளவுகள் கொடுக்க பட்டு இருக்கும்.


அதில் நீங்க விரும்பிய தேவைபடும் அளவை தேர்ந்து எடுத்துக்கலாம். எதுக்கு இந்த அளவுகள் என்றால் நான் வீடு கட்ட பிளான் போடுவது போல்இத்தனை அடி நீளம் இத்தனை அடி அகலம் என்று முன்பே முடிவு செய்து ஆரம்பிப்பது போல் இங்கேயே அளவுகள் கொடுக்கவேண்டும்.

இல்லை என்றால் நீங்களாக உயரம், அகலம் அளவுகளை கொடுக்கவேண்டும்.
அளவுகள்: 1) Pixels
2)Inches
3)cm
4)mm
5)Points
என்று பல அளவுகள் இருக்கின்றன, எது வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளவும்.
அடுத்து Color Mode : RGB (பொதுவாக பிரிண்டிங் அல்லாத மற்ற உபயோகத்துக்கு)
CMYK (பிரிண்டிங் மட்டும்)
Gray Scale (கருப்பு வெள்ளை மட்டும்)
இப்படி உபயோகத்துக்கு தகுந்தபடி நாம் தேர்வு செய்யவேண்டும், நாம் இங்கு RGB கலரை எடுத்துக்கலாம்.
Background Contents: white யை தேர்ந்து எடுத்துக்கலாம்.
பின் ஓக்கே பட்டனை கிளிக் செய்யவும்.

14 comments:

said...

நல்ல பயனுள்ள பதிவு..ஆனா ரொம்ப மெதுவா போறோமோ?..
நீங்க சொன்னதெல்லாம் 2 நிமிஷத்துல முடிச்சாச்சி ,அடுத்து காத்திருக்க வேண்டியிருக்கில்ல..

said...

ம்..நடத்துங்க :)

said...

படிச்சிட்டேன்.

said...

கேட்க மறந்திட்டேன்.. பிரிண்ட் எடுக்காததற்கு RGB ,அப்படி என்றால் இந்த படத்தினால் பிரயோஜனம் இல்லையா?

said...

ஐ, நம்ம ஏரியா..

said...

//வடுவூர் குமார் said...
கேட்க மறந்திட்டேன்.. பிரிண்ட் எடுக்காததற்கு RGB ,அப்படி என்றால் இந்த படத்தினால் பிரயோஜனம் இல்லையா?///

RGB என்பது Red. Green, Blue ஆகிய மூன்று கலர் சேர்ந்த கலவை படம்.
பிரிண்டிங்கில் அனைத்து இடத்திலும் CMYK(cyan, magenta, yellow, and key (black) வண்ண கலவையில் தான் பிரிண்ட் செய்ய முடியும், எனவே RGB கலரில் கொடுத்தால் நாம் சிஸ்டத்தில் பார்க்கும் கலருக்கும் பிரிண்டில் வரும் கலருக்கும் பெரியவித்தியாசம் இருக்கும்.

REG கலர் படங்கள் வெப் டிசைனுக்கு உகந்தவை.

said...

பயனுள்ள பதிவு..Speed irunthaal nalla irukkum

said...

பின் ஓக்கே பட்டனை கிளிக் செய்யவும்.
///

அப்புறம்...

said...

cs2 இருக்கு..


"போட்டோஷாப் cs3 keygen கிடைக்குமா..?

said...

RGB -ல் தேர்ந்தெடுத்தால் அச்சிடும்போது வண்ணம் வேறுபடும் என்பது தவறு. எந்த பிரிண்டரும் எந்த மோட் என்று பார்க்காது. படத்தில் உள்ள வண்ணத்தை பிரிண்டர் CMYK-க்கு பிரித்து அழகாக அச்சடிக்கும்.

said...

http://www.kirupa.com/motiongraphics/index.htm

said...

http://www.youtube.com/watch?v=B6OIulNzCys


மின்னல் இங்கே பாருப்பு

said...

பயனுள்ள பதிவு.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

said...

visit for digital album by adobe photoshop
http://universalcreation.blogspot.com/