அதுபோல் லேசோ டூலிலும் மூன்று வகை இருக்கிறது.
லேசோ
முதல் டூலை கிளிக் செய்து விட்டு படத்தின் மேல் ஆரம்பத்தை கிளிக் செய்து மவுசை தேர்வு செய்யவேண்டிய பகுதியில்மூவ் செய்து ஆரம்பித்த புள்ளி அருகே கொண்டு வந்து கிளிக்கை ரிலீஸ் செய்தால் அந்த பகுதி முழுவதும் செலக்ட் ஆகி இருக்கும்.
பாலிகன் லேசோ
இது முதலில் பார்த்த லேசோ டூலைவிட கொஞ்சம் வித்தியாசமானது, முதல் டூலில் முதல் மற்றும் ஆரம்ப புள்ளியை மட்டும் தான் கொடுக்க முடியும்,கொஞ்சம் வலைவு நெளிவான இடத்தில் அது ஒத்து வராது கையை விட்டால் தவறாக செலக்ட் ஆகிடும், பின் திரும்ப முதலில் இருந்து செலக்ட் செய்யவேண்டும்,ஆனால் பாலிகன் லேசோவில் ஒவ்வொரு கிளிக்கா கிளிக் செய்து அடுத்த அடுத்த நகர்வை சொல்லவேண்டும், பின் திரும்ப ஆரம்பித்த புள்ளி அருகே வந்தால் பாலிகன் லேசோடூல் கீழே ஒரு சிறியவட்டம் வரும் அப்படி என்றால் ஆரம்ப புள்ளி அருகே சரியாக வந்துவிட்டோம் என்று அர்த்தம், பின் கிளிக் செய்து முடித்தால் அந்த பகுதி மட்டும் செலக்ட் ஆகி இருக்கும்.
மேக்னட்டிக் லேசோ
இது நான் முதல் கிளிக் செய்து விட்டு படத்தின் மேல் நகர்த்தினால் அதுவாக பாயிண்டை பிக்ஸ் செய்து அகழகாக செலக்ட் செய்யும், இது பாதிவேலையை மிச்ச படுத்தும்.
இப்படி எல்லாம் ஒரு வகையில் செலக்ட் செய்யலாம்.
சரி இப்படி எல்லாம் கஷ்ட்டபட்டு செலக்ட் செய்யுறீங்க தவறுதலாக போட்டோ ஷாப் குளோஸ் ஆகிடுது அல்லது நீங்க வேறு எதையாவது செய்ய போய் செலக்ட் செய்துவைத்து இருக்கும் ஏரியா டி-செலக்ட் ஆகிவிடுகிறது அப்ப திரும்ப மறுபடியும் முதலில் இருந்து திரும்ப செலக்ட் செய்யனு.
இந்த குறைய போக்குவதுதான் பென் டூல், போட்டோஷாப்பின் கிங் டூல் இதுதான், இதை ஒருவன் பயன்படுத்துவதை வைத்தே எத்தனை வருடமாக இவன் போட்டோஷாப் யூஸ் செய்கிறான்என்று சொல்லிட முடியும்.
இதை ஒழுங்காக யூஸ் செய்ய வந்துவிட்டால் மற்ற டூல்ஸ் எல்லாம் அவசியமே இல்லை.
அதை அடுத்த பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.

அந்த மேஜிக் வேண்ட் டூலை எடுத்து எந்த கலரை செலக்ட் செய்யவேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் எங்கு எல்லாம் அதே கலர் தொடர்ச்சியாக இருக்கிறதோ, அது முழுவதும்செலக்ட் ஆகிவிடும்.அதன் மேலே இருக்கும் டாலரன்ஸ் என்ற இடத்தில் அதிகம் கொடுக்க கொடுக்க செலக்ஸன் அதிகமாக இருக்கும். மேலும் சில இடங்களை சேர்க்க வேண்டும் என்றால் Shift கீயை அழுத்திக்கொண்டுஎதை எதை எல்லாம் சேர்க்கவேண்டுமோ அல்லது விடுபட்ட இடத்தை கிளிக் செய்தால் அதுவும் சேர்ந்து செலக்ட் ஆகிவிடும்.
இது டாலரன்ஸ் 30 இருக்கும் பொழுது பின்னனி நீல கலர் மேல் கிளிக் செய்தது.
இது டாலரன்ஸ் 50 இருக்கும் பொழுது ஒரே ஒரு கிளிக்.
இது டாலரன்ஸ் 60 + விடு பட்ட இடத்தை shift கீயை அழுத்திக்கொண்டு மீதி இடத்தை கிளிக் செய்தது.
13 comments:
பென் டூல் பார்ட்டுக்கு வெயிட்டிங்.
எங்க இடையில் கொஞ்ச நாள் காணம போயிட்டீங்க.
பல விஷயங்கள் Gimp ஐ ஒத்து இருக்கிறது.
Gimp இலவசம் என்பது கூடுதல் தகவல்.
உள்ளேன் ஐய்யா.. வேற என்ன சொல்றது வீட்டுப்பாடம் செய்து பார்த்தா தான படிச்சதா அர்த்தம்.. ஹ்ம். நேரத்தையே காணம்.. நீங்க நடத்துங்க மொத்தமா ஒரு நாள் செய்துடறேன்..
சரவணன் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு மாஸ்க் டூல் மற்றும் ஒரு படத்தை இன்னொரு படத்துடன் மெர்ஜ் செய்யும் போது எப்படி நீரோட்டமாக தெரிவது போன்று இணைப்பது என்று விளக்கவும்.
//J K said...
பென் டூல் பார்ட்டுக்கு வெயிட்டிங்.
எங்க இடையில் கொஞ்ச நாள் காணம போயிட்டீங்க//
கொஞ்சம் கல்யாண வேலைங்க:)
******************
வடுவூர் குமார் said...
பல விஷயங்கள் Gimp ஐ ஒத்து இருக்கிறது.
Gimp இலவசம் என்பது கூடுதல் தகவல்.//
ஓ அப்படியா? அது பற்றி எதுவும் தெரியவில்லை எனக்கு!
************************
முத்துலெட்சுமி said...
உள்ளேன் ஐய்யா.. வேற என்ன சொல்றது வீட்டுப்பாடம் செய்து பார்த்தா தான படிச்சதா அர்த்தம்.. ஹ்ம். நேரத்தையே காணம்.. நீங்க நடத்துங்க மொத்தமா ஒரு நாள் செய்துடறேன்..////
வீட்டு பாடம் செய்யாம படிப்பதால் நோ -யூஸ். சீக்கிரம் செய்ய ஆரம்பிங்க!
***************************
சந்திப்பு said...
சரவணன் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு மாஸ்க் டூல் மற்றும் ஒரு படத்தை இன்னொரு படத்துடன் மெர்ஜ் செய்யும் போது எப்படி நீரோட்டமாக தெரிவது போன்று இணைப்பது என்று விளக்கவும்.///
படத்துடம் மெர்ஜ் செய்யும் பொழுது fether ஒரு 25 (செலக்ட் செய்துவிட்டு (Ctr+Alt+D) கொடுத்து டெலிட் செய்யுங்க சுமூத்தாக மெர்ஜ் ஆகும்!!!
வந்திட்டீங்களா?புகைப் படப் போட்டியெல்லாம் நல்லாத்தான் அசத்துறீங்க.பாடத்தை மட்டும் நேரம் கிடைக்கும் போது வந்து சொல்லித் தந்தீங்கன்னா கொஞ்சம் சித்து விளையாட்டுக்கள் கற்றுக் கொள்ள முடியும்.
உங்களுக்கு இப்படி ஒரு மறுபக்கம்?இன்றுதான் வருகிறேன்..
எனக்குத் தேவையான விஷயங்கள் நிறைய இருக்கும் போல் தெரிகிறது..(படு கத்துக்குட்டி நான்...)
நேரம் இருக்கும் போது வந்து படிக்கிறேன்...
சார்,தினமும் வந்துட்டுப் போறேன்.5 மாசமா வெய்ட்டிங்..அடுத்த க்ளாஸ் எப்ப ஆரம்பிக்கப் போறீங்க? :)
kusumbu is having time 2 teach,nice.
வாத்தியார் குசும்பன் அவர்களே..
இன்றுதான் இந்தத் தளத்தை முதன் முறையாகப் பார்க்கிறேன்.
தங்களுடைய இன்னொரு பக்கத்தைப் பார்க்க, பார்க்க எனக்கு திகிலாக இருக்கிறது. இவ்ளோ அறிவு ஞானத்தை வைத்து ஏன் இத்தனை நாட்கள் மொக்கை போட்டே காலத்தை கடத்தினீர்கள் ஐயா..
சரி.. சரி.. என்னையும் ஒரு மாணவனாக சேர்த்துக் கொள்ளவும்.
Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com
குசும்புக்கு பக்கவாத்தியாமா இதனையும் தொடர்ந்திருக்கலாமே:(
y no updates..?
Post a Comment