முதலில் போட்டோசாப் file openல் குறிப்பிட்ட புகைப்படத்தை தேர்வு செய்துக்கொண்டு ஒகே கொடுத்தால் அந்த புகைப்படம் போட்டோ சாப் உள்ளே வந்து இருக்கும்.


படத்தில் அம்பு குறியிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் பூட்டு மீது இரண்டு முறை கிளிக் செய்தால் ஒரு மெசேஜ் பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதுக்கு ஓக்கே என்று கொடுத்தால் அந்த பூட்டு ஐகான் காணாமல் போய்விடும்.
(பூட்டுக்கு அர்த்தம் அது இருக்கும் வரை அந்த லேயரில் இருக்கும் படத்தை எந்தவித மாற்றத்துக்கும் உட்படுத்த முடியாது. )
இப்பொழுது edit -> transform-> scale கிளிக் செய்யவும் அல்லது குறுக்குவழி ctrl+t கொடுத்தால் புகைப்படத்தை சுற்றி ஒரு நூல் வடிவத்தில் நான்கு மூலை மற்றும் நான்கு பக்க மையத்திலும் ஒரு சின்ன சதுரவடிவ கட்டம் இருக்கும் அதில் ஏதேனும் ஒரு மூலையில் கர்சரை கொண்டு சென்றால் அம்புகுறி மாறும் மாறிய பின் shift கீயை அழுத்திக்கொண்டு மவுசை டிராக் செய்யவும்


இப்படி ஆகும்.
பின் எந்த அளவு வேண்டுமோ அந்த அளவுக்கு சுருக்கிவிட்டு கிராப் டூலை எடுத்து 
படதின் மீது முழுவதும் வரும் படி கிளிக் செய்து, enter யை தட்டினால் தேவை இல்லாத மீதி வெள்ளை பகுதி கட் ஆகி புகைபடம் மட்டும் இருக்கும். பின் file-> save as-> filename. jpg என்று jpg formateல் save செய்யவும்.

படதின் மீது முழுவதும் வரும் படி கிளிக் செய்து, enter யை தட்டினால் தேவை இல்லாத மீதி வெள்ளை பகுதி கட் ஆகி புகைபடம் மட்டும் இருக்கும். பின் file-> save as-> filename. jpg என்று jpg formateல் save செய்யவும்.
அப்பொழுது image quality 4 அல்லது 5 கொடுக்கவும். இப்பொழுது புகைபடத்தின் அளவும், file size ம் குறைந்து இருக்கும்.
இது ஒரு வழி இன்னொரு எளிய வழியும் இருக்கு.
மேலே இருக்கும் மெனுவில் image யை கிளிக் செய்தால் image size என்று (ctrl +Alt + i)ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதில் முதலில் இருக்கும் pixel Dimension ல் இருக்கும் width & height என்று இருக்கும் இடத்தில் pixel க்கு பதில் % என்று மாற்றினால் width & height 100 என்று இருக்கும் அந்த இடத்தில் 25% அல்லது என்ன சைஸ் வேண்டுமோ அதை கொடுத்து ஓக்கே கொடுத்தால் சின்னதாக மாறிவிடும்.
இதை படம் போட்டு சொல்லவில்லை. நீங்களாக செய்துபார்க்கவும் சந்தேகம் இருந்தால் சொல்கிறேன். திரும்ப பழயபடி save as கொடுத்து JPG யில் save செய்துக்கவும்.
இதுவே ஒரு படம் இரண்டு படம் என்றால் இதை திரும்ப திரும்ப செய்யலாம். ஆனால் குறைந்தது 200 படம் எடிட் செய்யனும் என்றால் என்ன செய்யனும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு: போட்டோ சாப் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் போர் ஆக தெரியும் ஆனால் ஒன்றுமே தெரியாதவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் அதனால்தான் ஒவ்வொரு படியாக சொல்லி இருக்கிறேன்.
நன்றி: தாமதத்துக்கு மன்னிக்கவும், படிக்கலாம் வாங்க என்று பிளாக் ஆரம்பிச்சு அதை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் மிகவும் கஷ்டபட்டுவிட்டு போ என்று விட்டுவிட்டேன், பின் மை பிரண்டுதான் இணைத்து கொடுத்தாங்க அதனால் திரும்ப ஆரம்பிச்சுட்டேன், நன்றி மை பிரண்ட்.
நன்றி: தாமதத்துக்கு மன்னிக்கவும், படிக்கலாம் வாங்க என்று பிளாக் ஆரம்பிச்சு அதை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் மிகவும் கஷ்டபட்டுவிட்டு போ என்று விட்டுவிட்டேன், பின் மை பிரண்டுதான் இணைத்து கொடுத்தாங்க அதனால் திரும்ப ஆரம்பிச்சுட்டேன், நன்றி மை பிரண்ட்.
8 comments:
நல்லா தெளிவா போய்க்கிட்டிருக்கு
கன்டினியு!
கன்டினியு! :-)
சந்தேகங்கள் இருந்தா தீத்து வைப்பீங்களா ஆசானே...????
ஆயில்யன் said...
///சந்தேகங்கள் இருந்தா தீத்து வைப்பீங்களா ஆசானே...????///
கண்டிப்பாக தீர்த்துவிடலாம்:))))
என்னது 200 படத்தையும் ஒரே சமயத்தில் பண்ண முடியுமா?
புதிய தகவல்.. காத்திருக்கேன்.
இந்த படத்தைதானே புகைப்பட போட்டியில் கொடுத்தீர்கள்?அதில் உங்களுக்கு இது சரியாக வரவில்லை என்று சொல்லியிருந்தேன்! மாத்திக்கணும் போல.:-)
சில மணி நேரங்களுக்கு முன்னால் தான் இவ்வலைப்பூவிற்கு வந்தேன். செப்டம்பர்த் திங்களுக்குப் பிறகு பதிவுகள் இல்லையே - ஆரம்பித்ததன் நோக்கம் அடிபடுகிறதே என வருந்தினேன். என் எண்ணங்கள் தங்களை எப்படி எட்டியதோ தெரீயவில்லை. பதிவுகள் தொடர ஆரம்பித்து விட்டன. தொடர்க தொடர்க தொடர்க - நல் வாழ்த்துகள்.
//போட்டோ சாப் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் போர் ஆக தெரியும் ஆனால் ஒன்றுமே தெரியாதவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்//
உள்ளேன் ஐயா!
menu>image>image size> resoluion ஐ கம்மி பண்ணினால்....???
ஜூப்பர், பதிவு படிச்சிட்டு திரும்ப வரேன்.
வடுவூர் குமார் said...
என்னது 200 படத்தையும் ஒரே சமயத்தில் பண்ண முடியுமா?
புதிய தகவல்.. காத்திருக்கேன்.///
ஒரே சமயத்தில் அளவை சிறியது மட்டும் அல்ல ஒரேமாதிரியான செயல்களை பல படங்களுக்கும் திரும்ப திரும்ப செய்யனும் என்றாலும் அந்த முறை உதவும் இன்று அல்லது நாளை சொல்லிவிடுகிறேன்!!
நன்றி உங்கள் தொடர்வருகைக்கு:)
*****************************
cheena (சீனா) said...
///செப்டம்பர்த் திங்களுக்குப் பிறகு பதிவுகள் இல்லையே - ஆரம்பித்ததன் நோக்கம் அடிபடுகிறதே என வருந்தினேன். என் எண்ணங்கள் தங்களை எப்படி எட்டியதோ தெரீயவில்லை. பதிவுகள் தொடர ஆரம்பித்து விட்டன. தொடர்க தொடர்க தொடர்க - நல் வாழ்த்துகள்.///
இல்லை சீனா ஆரம்பித்த பின் தமிழ்மணத்தில் இணைக்க படாத பாடு பட்டு வெறுத்துபோய் விட்டுவிட்டேன். பின் பலரின் உதவியை நாடி கடைசியாக மை பிரண்ட்தான் இணைத்து கொடுத்தார்கள். அதான் பழயபடி ஆரம்பிச்சாச்சு:)
*************************
நட்டு said...
///உள்ளேன் ஐயா!///
வாங்க நட்டு
***************************
delphine said...
good shot!
நன்றி:)
***************************
மின்னுது மின்னல் said...
menu>image>image size> resoluion ஐ கம்மி பண்ணினால்....???
அப்படியும் செய்யலாம் resolution கம்மி செஞ்சு திரும்பவும் சேமிக்கும் பொழுது குவாலிட்டியையும் குறைப்பதால் இமேஜ் குவாலிட்டிட்டி மோசம் ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது, இமேஜ் சைஸ் % மட்டும் குறையசெய்தால் சைஸ் மட்டும் குறையும் resolution அப்படியே இருக்கும் save செய்யும் பொழுது கொஞ்சம் குறைந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது!
***************************
Baby Pavan said...
ஜூப்பர், பதிவு படிச்சிட்டு திரும்ப வரேன்.//
வாங்க வாங்க!
*****************************
Post a Comment